ஜலகண்டாபுரத்தில் இருந்து வாரம்தோறும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்லும் 6 லட்சம் தேங்காய்

By த.சக்திவேல்

மேட்டூர்: ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து வாரம்தோறும் வடமாநிலங்களுக்கு 6 லட்சம் தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன. இங்கு எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைச்சல் செய்யப்படும் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. முழு மட்டையுடன் மண்டிகளுக்கு வரப்படும் தேங்காய்களில், பாதியளவுக்கு நார் உரிக்கப்பட்டு பின்னர், அவை லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது, தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், ஜலகண்டாபுரத்தில் உள்ள மண்டிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு அதிகளவிலான தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரி சந்தோஷ் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி தொடங்கி தை மாதம் வரை குளிர்காலம் என்பதால் முற்றிய தேங்காய் மகசூல் கிடைக்க நாட்கள் அதிமாக இருக்கும். இதனால் 6 மாதங்கள் தேங்காய் மகசூல் குறைவு தான். மாசி தொடங்கி ஆனி மாதம் வரையிலான கோடைகாலத்தில் முற்றிய தேங்காய் மகசூல் அதிகமாக கிடைக்கும்.

தற்போது, கடந்தாண்டை விட நடப்பாண்டில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் மண்டிகளுக்கு வரத்தும் அதிகளவில் உள்ளது. ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா, சண்டிகர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிகளவில் தேங்காய் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, 8 முதல் 10 லோடு (ஒரு லோடு 20 ஆயிரம் - 25 ஆயிரம் தேங்காய்)வரை அனுப்பப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், வாரம்தோறும் 25 முதல் 30 லோடு வரை அனுப்பப்பட்டு வருகிறது.

அதாவது, 6 லட்சம் தேங்காய் வரை அனுப்பப்படுகிறது. குறிப்பாக, தேங்காய் உற்பத்தி, தேவையை பொறுத்து தான் தேங்காய் அனுப்பப்படுகிறது.

தற்போது, தேங்காய் மகசூல் அதிகரித்துள்ளதால் ஒரு தேங்காய் ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும், விலை குறைவு தான். ஆனால், வடமாநிலங்களில் தேவை இருப்பதால், ஏற்றுமதி அதிகரித்துள்ளது சற்று ஆறுதலாக இருக்கிறது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்