மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 195 புள்ளிகள் சரிவடைந்து 63,113 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 18,746 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது மெல்ல உயரத் தொடங்கியது. காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 282.40 புள்ளிகள் உயர்வடைந்து 63,200.03ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.95புள்ளிகள் உயர்ந்து 18,747.05 ஆக இருந்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உள்ளிட்ட முக்கிய விகித உயர்வு குறித்த அச்சத்திற்கு மத்தியில், உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி வர்த்தகத்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி பங்குகள் உயர்வில் இருந்தன.
» உலக ஜிடிபி பங்களிப்பில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுக்கும் - அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை
» மைக்ரோ கார் பிரிவில் பெங்களூரைச் சேர்ந்த விங்க்ஸ் இவி நிறுவனத்துக்கு விருது
டிசிஎஸ், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்எல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago