தமிழ்நாடு அரசின் திட்டங்களால் தொழில்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சமீப ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் ஊக்கத் தொகைத் திட்டங்கள் குறித்து நகர வர்த்தக சபைகளின் ஆலோசனைக் குழு தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

வர்த்தக சபை உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சென்னை வர்த்தக சபை, ஹிந்துஸ்தான் வர்த்தக சபை, ஆந்திர வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

மின் வாகனம், மின்னணு பாகங்கள், ஆய்வு மற்றும் மேம்பாடு, ஜவுளி தொழில்நுட்பம், விமானம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்து கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.

ஹிந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் நாகப்பன் பேசுகையில், “தமிழ்நாடு அரசு தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி உள்ளது. தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய திட்டங்களை தொடர்ந்து கொண்டுவந்தபடி உள்ளது. ஊக்கத் தொகை திட்டங்கள் தொழில்துறையில் முதலீடுகள் அதிகரிக்க உதவுகின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் இத்திட்டங்கள் முக்கிய பங்களிக்கின்றன” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE