3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் -3.48% ஆக சரிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 3.48 சதவீதம் (-3.48%) ஆக சரிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: இந்தியாவில் மொத்த விலை பண வீக்கம் கடந்த மே மாதம் -3.48% ஆக இருந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் -0.92% ஆக இருந்த நிலையில், அது கடந்த மே மாதம் -3.48% ஆக சரிந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். தானியங்கள், கோதுமை, காய்கறிகள், உருளைக்கிழங்கு, பழங்கம், முட்டைகள், கறி, மீன், எண்ணெய்வித்துக்கள், கனிமங்கள், கச்சா எண்ணெய்கள், இயற்கை வாயு, இரும்பு ஆகியவற்றின் விலை சரிவே மொத்த விலை பணவீக்க சரிவுக்குக் காரணம்.

கடந்த ஏப்ரலில் 3.54 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், மே மாதம் 1.51 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல், கடந்த ஏப்ரலில் 0.93 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம் கடந்த மே மாதம் -9.17 சதவீதமாக சரிந்தது. உற்பத்திப் பொருட்களின் பணவீக்கமும் கடந்த ஏப்ரலில் -2.42% ஆக இருந்த நிலையில் அது கடந்த மே மாதம் -2.97% ஆக சரிந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் கடந்த ஜூலை 2020-ல்தான் முதல்முறையாக மைனசில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்