ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரூ.500 நோட்டை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமோ ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை ரூ1.80 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். அவசரப்படுவதற்கு எந்த தேவையும் இல்லை. ஆனால் செப்டம்பர் மாதத்தின் கடைசி 10-15 நாட்களில் அவசர அவசரமாக சென்று மாற்ற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்