ஓசூர்: மேடை அலங்காரத் தேவை காரண மாக கெலமங்கலம் பகுதியில் கலர் சாமந்திப்பூ சாகுபடி கைகொடுத்து வருவ தாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட அலங்கார மலர்கள் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
5 ஆயிரம் ஏக்கர்: இப்பகுதியில் ஆண்டு முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இம்மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்திப்பூவைப்போல கலர் சாமந்தியும் இப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கலர் சாமந்தியில் சிவப்பு மற்றும் ஊதா நிற மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மஞ்சள் சாமந்திப்பூ ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் விற்பனையை மையமாக வைத்து சாகுபடி செய்யப்படுகின்றன.
» இன்டர்லாக்கிங் என்றால் என்ன: ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?
» Odisha Train Accident | குழந்தைகளுக்கு இலவச கல்வி: அதானி அறிவிப்பு
ஆண்டு முழுவதும் வரவேற்பு: வெள்ளை சாமந்திப்பூ கேரள மாநிலத்தில் ஓணம் உள்ளிட்ட பண்டிகைக்கு அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது.
அதேபோல, கலர் சாமந்திப்பூக்கள் திருமணம் மற்றும் வரவேற்பு மற்றும் மேடை அலங்காரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் ஓசூர் அருகே கெலமங்கலம், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் சாமந்திப்பூக்கள் தேவைக்கு ஏற்ப பல வண்ணங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
மற்ற சாமந்திப்பூக்களை விட கலர் சாமந்திக்கு சந்தையில் ஆண்டு முழுவதும் வரவேற்பு உள்ளது. இதனால், கலர் சாமந்திப்பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கர்நாடகாவில் வரவேற்பு: இதுதொடர்பாக மலர் விவசாயிகள் கூறியதாவது: கெலமங்கலம் பகுதியில் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்திப்பூவைப்போல கலர் சாமந்தியும் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறோம். இப்பூக்கள் திருமணம், வரவேற்பு மற்றும் மேடை அலங்காரத் தேவைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாகக் கர்நாடக மாநிலத்தில் கலர் சாமந்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், சீசனுக்கு ஏற்ப நல்ல விலையும் கிடைக்கிறது. வியாபாரிகளே நேரில் வந்து வாங்கி செல்வதால், போக்குவரத்து செலவு இல்லை, கலர் சாமந்தி சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு நாற்று ரூ.3-க்கு வாங்கி வந்து சொட்டு நீர்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago