சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 2) சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,104-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மே 26-ம் தேதி தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது.
இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5,638-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,104-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,792-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,600 ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
11 days ago
வணிகம்
11 days ago