ஒரு நிமிட வாசிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதலவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியருமான பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளுடன் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைர்ச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT