மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி; படகுகளையும் மீட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி, அவர்களின் படகுகளும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"இலங்கை சிறைகளில் கடந்த டிசம்பர் 18ம் தேதி முதல் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நன்றியும், பாராட்டுகளும்!

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் படகுகளும், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசிடம் பேசி அந்நாட்டு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மத்திய அரசு மீட்க வேண்டும்!

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும், இந்தியா-இலங்கை ஐந்தாவது கூட்டு பணிக்குழு கூட்டத்தை விரைந்து நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்