பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது : 700 காளைகள்; அடக்க துடிக்கும் காளையர்கள்

By செய்திப்பிரிவு

மதுரை : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 700 காளைகளுடன் உற்சாகத்துடன் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் காளைகளை சிறப்பிக்கும் வகையிலும், தமிழரின் வீரத்தையும் போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.

இதனிடையே, பொங்கல் பண்டிக்கையொட்டி, நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 21 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக கார் பெற்றார். இந்த நிலையில் தற்போது இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாலை 4 வரை நடைபெறும் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இப்போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு காங்கேயம் பசுமாடும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாளை ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்பதால் 17ம் தேதி திங்கள் கிழமை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE