புதிய கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகள் மூடாமல் விட்டிருப்பது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: "புதிய கரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?

நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும் (Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது.

தேவைப்பட்டால் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம்" என்று டிடிவி தினகரன் கருத்ததெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்