காரைக்கால்: காரைக்காலில் நகராட்சி ஊழியர்கள் தங்களது 6 மாத கால ஊதிய நிலுவையை வழங்கக் கோரி தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறும்போது, "புதுச்சேரி அரசின் கொள்கை முடிவுகளாலும், காரைக்கால் நகராட்சிக்கு அரசு தருவதாக உறுதியளித்த ஊதியத்துக்குக்கான மானியத்தொகையை முறையாக வழங்காததாலும், வீட்டு வரி குறைப்பு, குப்பை வரி நிறுத்தம், கேபிள் டிவி வரி நிறுத்தம் போன்றவற்றாலும் காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் ஊழியர்களும், துப்புரவு பணியாளர்களும், ஓய்வுபெற்ற ஊழியர்களும் குடும்பத்தை நடத்த வழியின்றி மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். இது தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும், மாநில அரசு, உள்ளாட்சித்துறை, மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தும், ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்" என்றனர். இந்தப் போராட்டத்தை காரைக்கால் நகராட்சி ஊழியர் சங்கத் தலைவர் சண்முகராஜ் தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago