சென்னை: தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் ஆணையர்களாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சவால்களை போக்கும் வகையில், சென்னை ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி, தாம்பரம் பகுதிகளை கொண்டு இரண்டு ஆணையரகம் அமைக்க உத்தரவிட்டு கடந்த ஆண்டு நடந்து முடிவு கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னையை போல் தாம்பரம் காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியும், ஆவடி காவல் ஆணையராக ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இரண்டு புதிய ஆணையரகத்திற்காக ஆணையர்கள் நியமனத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதில் புதிதாக அமைக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் பதவிக்கு நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக எம்.ரவி நியமிக்கப்படக்கூடும் மற்றும் ஆவடியில் புதிய ஆணையருக்கான போட்டி நிலவு வதாக இந்து தமிழ் நாளிதல் முன்பே கணித்து இருந்தது.
இதனிடையே, இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிர்வாகம் ஏடிஜிபியாகப் பதவி வகித்து வந்த எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாகவும், அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாகப் பதவி வகித்து வந்த சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 2022ம் ஆண்டின் முதல் நாளில் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனிடையே, இது நாள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட இருந்த ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை ஆணையாராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago