கள்ளக்குறிச்சி: "பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புறத் தேர்தலில் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்திற்கு முன்னரே மத்திய அரசு ஒதுக்கும். அதை விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை. பேரிடருக்குப் பின் மத்தியக் குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும் தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கபட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவு செய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரபெற்றிருக்கும்.
நடைபெறவுள்ள பட்ஜட் கூட்டத் தொடரிலும் தமிழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் திட்டங்கள் அமையும். ஆண்டுதோறும் சிறப்பாக மத்திய பட்ஜட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக, கடந்த 7 வருடங்களில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
பெட்ரோல் விலையில் மாநில அரசு வரி விதிப்பை குறைக்க பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை" என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago