நீலகிரியில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட 3 நாட்களுக்கு தடை

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

’கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று (31-ம் தேதி) இரவு முதல் ஜனவரி 2-ம் தேதி வரை, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ’அரசின் வழிகாட்டுதல்களின்படி, வழிப்பாட்டு தலங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். கேளிக்கை விடுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், சுற்றுலா தலங்கள் திறந்திருக்கும், சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்து, கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து அவற்றை கண்டு களிக்கலாம். கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக புத்தாண்டை மக்கள் கொண்டாட வேண்டும்' என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்