சென்னை: தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதன் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
''தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் நாளை மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாளை 31.12.2021 அன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
01.01.2022, புத்தாண்டு அன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago