ஒமைக்ரான் சோதனையில் கூடுதல் கவனம் தேவை: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஒமைக்ரான் சோதனையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டவர் நைஜீரியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்திலிருந்து எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.

அவருக்குப் பல நாட்களுக்குப் பிறகுதான் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்பாக அவருடன் தொடர்பில் இருந்த 52 பேர் உட்பட 280 பேர் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விழிப்புடன் இருந்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்!

இனி வரும் நாட்களிலாவது சென்னைக்கு வரும் விமானப் பயணிகள் எந்த நாட்டிலிருந்து பயணத்தைத் தொடங்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்கள் அனைவருக்கும் கரோனா சோதனையைக் கட்டாயமாக்க வேண்டும்!" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE