விஜயவாடா கோட்டத்தில் மூன்றாவது ரயில் பாதை இயக்கப்படவுள்ளதால், ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
"தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா கோட்டத்தின் நெல்லூர் மாவட்டம் படுகுபாடு ரயில் நிலையம் - எஸ்.வெங்கடேஸ்வர் பாலம் இடையே 3-வது ரயில் பாதை இயக்குவதால், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சில ரயில் சேவைகள் ரத்து மற்றும் பயண மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
» அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு: காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு
விரைவு ரயில் சேவைகள் ரத்து விவரங்கள் பின்வருமாறு:
ரயில் எண். 17237 - பித்ரகுண்டா - சென்னை மெயில் / எக்ஸ்பிரஸ் பிட்ரகுண்டாவிலிருந்து 04:45 மணிக்குப் புறப்படும் ரயில் சேவை, ரயில் எண். 17238 - சென்னை - பித்ரகுண்டா மெயில் / மாலை 04:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் சேவை டிசம்பர் 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 07, 2021 அன்று ரயில் எண். 12711 - விஜயவாடா - சென்னை பினாகினி எக்ஸ்பிரஸ் விஜயவாடாவில் இருந்து காலை 6:10 மணிக்குப் புறப்படும் ரயில் சேவை, ரயில் எண். 12712 - சென்னை - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ், மாலை 02:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், ரயில் எண்.12841 - ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மாலை 03:30 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் டிசம்பர் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மாலை 06:15 மணிக்கு (அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்."
இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago