புதுச்சேரியில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 28 பேருக்கு தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (டிச. 4) வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,514 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 15, காரைக்காலில் 7, மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 56 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 58 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 236 பேரும் என மொத்தமாக 294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் கரோனா பாதிப்பிற்கு மாஹேவைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,875 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 887 (98.32 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 12 லட்சத்து 55 ஆயிரத்து 172 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்