புதுச்சேரி மாநிலத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ.18)வெளியிட்ட தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 2,820 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 24, காரைக்காலில் 10, ஏனாமில் 5, மாஹேவில் 2 பேருக்கு என மொத்தம் 41 பேருக்கு (1.45 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 83 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 243 பேரும் என மொத்தமாக 326 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» கண்ணீர் விட்டு அழுத பேடிஎம் நிறுவனர்; பட்டியலிடப்பட்ட அன்றே பங்குகள் சரிவால் அதிர்ச்சி
» நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: அடுத்த சில தினங்களுக்கு மழை நிலவரம் என்ன?
புதிதாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,867 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது.
இதனிடையே 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 368 (98.29 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 69 ஆயிரத்து 82 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago