சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கான கட்டணம் வழக்கம் போல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களைக் காக்கும் வகையில் மீட்பு நடவடிக்கை நிறைவடையும் வரையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களின் பசி போக்கப்பட்டது.
தற்போது சென்னையின் பல பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதனிடையே, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுகான கட்டணம் வழக்கம்போல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றுப் பசியைப் போக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago