உணவகத்தில் தரமற்ற பொருட்கள்: பறிமுதல் செய்து அழித்த கள்ளக்குறிச்சி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் 

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அருகே உணவகத்தில் நடைபெற்ற சோதனையில் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்த அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உடல்நிலை பாதிப்பு காரணமாகக் குழந்தைகள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில், கெட்டுப்போன உணவு சாப்பிட்டதன் காரணமாக குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்துப் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சங்கராபுரத்தில் இருந்த உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சமையலுக்குத் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

உடனடியாக தரமற்ற பொருட்களைப் பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள், மீண்டும் தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE