முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணமலை குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் போதுதான் தமிழக விவசாயிகளுக்கு 10 டி.எம்.சி நீர் கிடைக்கும். நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது வெறும் 5 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைக்கும்.

தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு, அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கு போக்கு சொல்லி 136 அடியில் அணையின் மதகுகளைத் திறப்பதற்கு வாய்மொழி உத்தரவு கொடுத்துவிட்டு, தற்போது பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்