கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உயிரிழந்த கனகராஜின் உறவினர் ரமேஷை 5 நாட்கள் காவலில் விசாரிக்க உதகை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோடநாடு சதித் திட்டம் குறித்துத் தெரிந்திருந்த நிலையில் போலீஸ் விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷைத் தனிப்படை போலீஸார் கடந்த 25-ம் தேதி கைது செய்தனர்.
இருவரையும் நவம்பர் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, இருவரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து ரமேஷ் இன்று பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரையும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, ரமேஷை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago