மீண்டும் முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் கோவை- மங்களூரு, நாகர்கோவில், கண்ணூர் ரயில்கள் இயக்கம்

By க.சக்திவேல்

முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் கோவை- மங்களூரு, நாகர்கோவில், கண்ணூர் தினசரி ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''பொதுமக்களின் தேவை கருதியும், ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் படியும், முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி- பாலக்காடு- திருச்சி இடையேயான தினசரி ரயில் (எண்கள்: 06843, 06844), 6 முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் கரூர், ஈரோடு, கோவை வழியாக வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும்.

இதேபோல, கண்ணூர்- கோவை- கண்ணூர் இடையேயான தினசரி ரயில் (எண்கள்: 06607, 06608), 4 முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் கோழிக்கோடு, சொர்ணூர், பாலக்காடு வழியாக வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும். கோவை- மங்களூரு, சென்ட்ரல்- கோவை இடையேயான தினசரி ரயில் (எண்கள்: 06323, 06324), 4 முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் பாலக்காடு, சொர்ணூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் இயக்கப்படும்.

நாகர்கோவில்- கோவை- நாகர்கோவில் இடையேயான தினசரி ரயில் (எண்கள்: 06321, 06322), 4 முன்பதிவில்லாப் பெட்டிகளுடன் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் இயக்கப்படும்''.

இவ்வாறு சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்