இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
’’ரயில் மூலம் மட்டுமல்லாமல், விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 17-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலாவில் ஹைதராபாத் நகரத்தின் வரலாற்றைச் சிறப்பிக்கும் கோல்கொண்டா கோட்டை, சார்மினார், மெக்கா மஸ்ஜித், சாலர்ஜங் அருங்காட்சியகம், லும்பினி தோட்டம், ராமோஜி சினிமா நகரம் ஆகிய இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 இரவு, 3 பகல் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு ரூ.15,595 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» தென் மாவட்டங்களுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம்: அதிமுக கொடி கட்டிய காரில் கிளம்பிய சசிகலா
இதில், விமானக் கட்டணம், ஏசி ஓட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனப் போக்குவரத்து, சுற்றுலா வழிகாட்டி, உணவு ஆகியவை அடங்கும். இந்தச் சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசியின் கோவை அலுவலகத்தை 90031 40655, 82879 31965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்’’.
இவ்வாறு ஐஆர்சிடிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago