புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று ( அக். 6) வெளியிட்ட தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 4,733 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-48, காரைக்கால்- 15, மாஹே- 10 பேர் என மொத்தம் 73 பேருக்கு (1.54 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 110 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 529 பேரும் என 639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» எந்த மாற்றமும் இல்லை; எப்போதும் என்னுடன் அவர்தான் ஓப்பனிங்: வார்னருக்கு ஆரோன் பின்ச் ஆதரவு
» திருச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம்: துணைவேந்தர் தகவல்
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 76 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 259 (98.04 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 32 ஆயிரத்து 254 பேருக்கு (இரண்டு டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago