ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் புதுச்சேரியில் நள்ளிரவு வரை திரையரங்குகள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளதால், 4 காட்சிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதுவையில் கடந்த மாதம் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முடிவடைந்தது. இதையடுத்து மேலும் சில தளர்வுகள் அளித்து, வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை மாநில செயலாக்கக் குழு உறுப்பினர் செயலர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.
புதுவையில் உள்ள திரையரங்குகள் 50 சதவீதப் பார்வையாளர்களுடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கரோனா தடுப்பு ஏற்பாடுகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை புதுச்சேரியில் 3 காட்சிகளுடன் இயங்கி வந்த திரையரங்குகள் இன்று முதல் நான்கு காட்சிகளுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago