புதுச்சேரியில் 59 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 2 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 21) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,501 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 48, காரைக்கால் - 3, மாஹே - 8 பேர் என மொத்தம் 59 (1.69 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 151 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 757 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 908 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், காரைக்கால் திருநள்ளாற்றைச் சேர்ந்த 2 பேர் தொற்று பாதித்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,808 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.

புதிதாக 112 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 116 (97.79 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 16 லட்சத்து 6 ஆயிரத்து 844 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 21 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 77 ஆயிரத்து 866 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்