ஆப்கன் அதிபராக அஷ்ரப் கானி இருக்கும்வரை தலிபான்கள் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார்கள் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறும்போது, “தலிபான்கள் பிரதிநிதிகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்காக வந்தபோது அவர்களைச் சமாதானப்படுத்த நான் முயன்றேன். அவர்களுடன் பேசியதன் முடிவில் ஆப்கானிஸ்தானின் அதிபராக அஷ்ரப் கானி தொடரும்வரை அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்தமாட்டார்கள் என்று புரிந்தது” என்று தெரிவித்தார்.
ஆப்கனில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவுகிறது என்று அஷ்ரப் கானி தலைமையிலான அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தக் கருத்தை இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
» தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
» தடுமாறும் பல்கலைக்கழகங்கள்; அரசுக் கல்லூரிகளின் ஊதியத்தை தமிழக அரசே வழங்க வேண்டும்: ராமதாஸ்
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago