வெளிநாட்டவரும் இனி கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்: மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

வெளிநாட்டவரும் இனி கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒன்றிணைந்து போராடுவோம்; ஒன்றிணைந்து வெல்வோம். இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவரும் இனி கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், வைரஸ் பரவலில் இருந்து ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இன்று ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 51 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE