கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஆக. 04) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்திலுள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் 4,084 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இது தவறு!

கல்லூரிகள் திறக்கப்படாததைக் காரணம் காட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைனில் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பாடம் நடத்தி வரும் நிலையில் அதற்கான ஊதியத்தை மறுப்பது நியாயமல்ல!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்