மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆக.2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோயில்களில் ஆக.02 முதல் 08ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அழகர்கோவில், பழமுதிர்சோலை முருகன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் வருகின்ற ஆகஸ்ட் 02ம்தேதி முதல் ஆகஸ்ட் 08ம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் கரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக கோயில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஆடிக் கிருத்திகை திருவிழா மற்றும் பொதுதரிசனத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவல் சற்றே அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 1,986 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதுமே ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு தினங்களை ஒட்டி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் கூடும் என்பதால் அனைத்து கோயில்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE