சிங்கப்பூரில் பள்ளி மாணவர் ஒருவர், சக மாணவரைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில், ''16 வயதான பள்ளி மாணவர் ஒருவர் தனது சக வகுப்பு மாணவரைக் கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட மாணவரின் உடல் பள்ளிக் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் அருகே கோடரியும் கைப்பற்றப்பட்டது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கைது செய்யப்பட்ட மாணவர் 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, அந்த மாணவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் கூறும்போது, “போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்களே நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் எப்போதும் உங்களுக்கு உதவிசெய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
» பிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேதனை
சிங்கப்பூர் சட்டத்தின்படி கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர் இருவரின் வயதும் 18க்குள்ளாக இருந்தால் அவர்களின் பெயர் வெளியிடப்படாது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago