17 ஆண்டுகளுக்குப் பின் வாஜ்பாய் பயன்படுத்திய அறையிலிருந்து பெயர்ப் பலகை அகற்றம்: காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் பயன்படுத்திய அறையிலிருந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நாடளுமன்ற வளாகத்தில் அறை எண் 4ல் தான் தனது அலுவல்களை மேற்கொண்டு வந்தார். 2004ல் பாஜக தோற்ற பின்னரும், வாஜ்பாய் பதிவியில் இல்லாத காலத்திலும், காங்கிரஸ் ஆட்சியிலும் கூட அந்த அறையின் வாசலில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை.

2018ல் வாஜ்பாய் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னரும் அந்த அறையின் வாயிலில் அவர் பெயர்ப்பலகை அங்கேயே இருந்தது.

2014ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறை சிறிது காலம் அத்வானிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். அடுத்த மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

அத்வானியின் பெயர்ப்பலகை அந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அத்வானி மிகுந்த வேதனையைடைந்து நாடாளுமன்ற மத்தி அரங்கில் சோகமாக அமர்ந்திருந்தாராம். அதனையடுத்து அந்தப் பெயர்ப்பலகை மீண்டும் அங்கேயே வைக்கப்பட்டதாம்.

இப்படி பல்வேறு கதைகளைக் கொண்ட அந்த அறையிலிருந்து வாஜ்யாயின் பெயர்ப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது. அந்த அறையை இனி பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பயன்படுத்தவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE