கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கேரளாவைப் பின்பற்றி ஒருநாள் முன்னதாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. முஸ்லிம்கள் திரளானோர் இந்த பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதே நேரம் வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து கேரளாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கேரளாவின் அண்டைய மாவட்டமான கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், குலசேகரம், களியக்காவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பக்ரீத் கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் கோட்டார் இமாம் அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசல், இளங்கடை பள்ளிவாசல் மற்றும் மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காக்களில் இன்று காலை முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago