தலிபான்கள் அறிவிப்பால் சர்ச்சை

பெண்களின் பெயர்ப் பட்டியல் தேவை என்ற அறிவிப்பை தலிபான்கள் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்கள், தங்களது வீடுகளிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 45 வயதுக்குள்ளாக கணவனை இழந்த பெண்களின் பெயர்ப் பட்டியலை அளிக்க வேண்டும் என்றும் அவர்களை தங்களது போரிகளுக்கு மணமுடித்து வைக்க இருப்பதாகவும் தலிபான்கள் கடிதம் வெளியிட்டுள்ளதாக ஆங்கில இதழான சன், செய்தி வெளியிட்டுள்ளது.

தலிபான்களின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்கள், இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

பின்னணி:

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE