சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள் (எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்…மாற்ற வசதியாக இருக்கும்) என்று நடிகையும் மநீம நிர்வாகியுமான ஸ்ரீபிரியா ட்வீட் செய்துள்ளார்.
மநீம துணைத் தலைவராக இருந்து அதிலிருந்து விலகிய மகேந்திரன் ஒரு பெரும் படையுடன் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பு தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில்தான் மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்டோரின் இணைப்பு குறித்து ஸ்ரீபிரியா சூசகமாக இந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் மகேந்திரன். மருத்துவரான மகேந்திரன் தனி அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கட்சியின் ஆரம்பக்காலத் தலைவர்களில் ஒருவராக, துணைத் தலைவராக கமலுடன் இணைந்து பயணித்தார். கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகினார்.
» திமுகவில் இணைந்தது ஏன்? 11,000 பேர் மநீமவைத் துறந்ததன் காரணம் என்ன?- மகேந்திரன் பேட்டி
» அட்டாக்பாண்டிக்கு பரோல் கேட்டு மீண்டும் மனு: மதுரை சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு
இந்நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 11 ஆயிரம் தொண்டர்கள் கொண்ட பட்டியலையும் அளித்தார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago