ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நிலையில் டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்?

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இரு வாரங்களே உள்ள நிலையில், டோக்கியோவில் அவசர நிலையை அறிவிக்கும் முடிவில் ஜப்பான் அரசு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் 900க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவின் பரவலுக்கு டெல்டா வைரஸ்தான் காரணம் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் யோஷியிடே சுகா இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து டோக்கியோவில் இரு வாரங்கள் அவசர நிலை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஆனால், தற்போது தலைநகர் டோக்கியோவில் மீண்டும் கரோனா அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி ஜப்பானில் தொடங்க உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்