கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள்

By கி.மகாராஜன்

கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கரோனா ஊரடங்கு நிபந்தனைகளை மீறுவோர் மீது சட்டப்படி அபராதம் வசூலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றாத மத்திய, மாநில அரசுகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ரமேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், கரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கால நிபந்தனைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கரோனா 3-வது அலையின் போது அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்