கரோனாவை மட்டுமே நினைக்கும் உலகில் நாம் வாழவில்லை: பிரிட்டன் சுகாதாரத்துறைச் செயலாளர்

கரோனாவை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் உலகில் நாம் வாழவில்லை என்று பிரிட்டன் சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் கூறும்போது, “நாம் கரோனாவை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் உலகில் வாழவில்லை. கரோனாவை மட்டுமே நினைத்துக்கொண்டு பிற பிரச்சினைகளான பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சவால்களைப் புறக்கணிக்க முடியாது. கரோனாவின்போது பிற உடல் பிரச்சினைகள் சார்ந்த சுமார் 70 லட்சம் மக்கள் சிகிச்சைக்குக் கூட முன்வரவில்லை” என்று தெரிவித்தார்.

”கரோனா பெருந்தொற்று இன்னும் பிரிட்டனில் ஓயவில்லை. ஆகையால், மக்கள் கரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியில் செல்வதன் அவசியம், அவசரம் கருதி மக்கள் செயல்பட வேண்டும்” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19-ம் தேதி முதல் பிரிட்டனில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. அங்கு, மூன்றாம் முறையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில்தான் அதிகப்படியான கரோனா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை 1,28,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE