பிலிப்பைன்ஸ் விமான விபத்து: பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் ராணுவத் தரப்பில், ”அமெரிக்க விமானப் படை எங்களுக்கு உதவியாக வழங்கிய சி-130 ஹெர்குலஸ் வகை விமானம்தான் விபத்துக்குள்ளாகியுள்ளது .

சுலு மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி நகரான பதிகுல் என்ற நகர் அருகே இருக்கும் பங்கால் கிராமத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

சாகயான் டி ஓரோ நகரிலிருந்து ராணுவ வீரர்களை சுலு நகருக்குக் கொண்டுசென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் விமானிகள் 3 பேர், 5 ஊழியர்கள் உள்ளிட்ட 92 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான மழை காரணமாக ஓடுபாதை தெரியாமல் விமானம் விபத்துக்குள்ளானதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தில் 29 வீரர்கள் உயிரிழந்தனர்.

40-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது பிலிப்பைன்ஸ் மக்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்