கரோனா வைரஸ் இயற்கையாக உருவானதாகக் கூறப்படுவதை நம்பவில்லை: டாக்டர் ஆண்டனி ஃபாசி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டனி ஃபாசி பேசும்போது, “கரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. கரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானதாகக் கூறப்படுவதை தன்னால் நம்பமுடியவில்லை. இதுகுறித்த திறந்த விசாரணை வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து கூறிவந்தன. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு பிப்ரவரி மாதம் சீனாவுக்குச் சென்றது. இதன் முடிவில் கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில்தான் உருவானது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருந்தது. இந்த நிலையில் ஆண்டனி ஃபாசி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE