முகநூலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது.
திண்டுக்கல் ராமராஜபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
முகநூலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக என் மீது வாடிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் நிலவும் அமைதியை குலைக்கும் உள்நோக்கத்துடன் அந்த கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் என்னை பொய்யாக சேர்த்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
» ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கரோனா இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: ஸ்டாலின் பேட்டி
» தொற்று பரவலைத் தடுக்க தேனி மருத்துவக்கல்லூரி கரோனா வார்டில் உதவியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வருங்காலங்களில் இதுபோன்ற அவதூறான கருத்துக்களை பரப்பமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையேற்று முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago