மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அனல்மின் நிலையங்களிலும் நாளொன்றுக்கு 24,000 டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் உராய்வின் காரணமாக அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தீ மளமளவென எரியத் தொடங்கியது. தகவலறிந்த மேட்டூர் அனல் மின் நிலையத் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது .
இந்த தீ விபத்து காரணமாக, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் கொண்டு செல்லும் கோபுரம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
ஏற்கனவே உற்பத்தித் தேவை குறைவின் காரணமாக 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago