இஸ்ரேலில் மத வழிப்பாட்டு கூட்டம் ஒன்றில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு மீறி கூடியதலால் நெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர்.
இஸ்ரேலில் 60% க்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், அங்கு கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் பெரும் திரளாக மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலில் மத நிகழ்வு ஒன்றில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள மிரோன் பகுதியில் புனித தளத்தில் நடத்தப்பட்ட யூதர்கள் மத நிகழ்வில், அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ”மோசமான இழப்பு. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago