சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயமானது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் நகரத்தார் புதுப்பித்து கட்டினர்.
தற்போது இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலராக காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சுமதி உள்ளார்.
இந்நிலையில் அவர் 1948-ம் ஆண்டு இரணியூர் கோயில் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, சோமஸ்கந்தர் , ஸ்கந்தர் , பிரியாவிடை அம்மன் , தனி அம்மாள் , ஞானசம்பந்தர் , சுந்திர மூர்த்தி , நித்திய உற்சவ சுவாமி , மற்றும் நித்திய உற்சவ அம்பாள் ஆகிய 8 பழமையான சிலைகள் காணாதது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago