ஒரத்தநாட்டில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ-வான ராமச்சந்திரனையே நிறுத்தி இருக்கிறது திமுக. வயோதிகம் காரணமாக ராமச்சந்திரனால் பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி ஏற முடியவில்லை.
இதனால் வாகனத்தில் இருந்தபடியே அவர் வாக்குத் திரட்டினார். அவருக்குப் பதிலாக அவரது மகள் அபிராமி, வாக்குச் சேகரிப்பில் புகுந்து விளையாடினார். தந்தைக்கு ஆதரவு கேட்டு தெருத் தெருவாக நடந்து சென்ற அபிராமி, வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் கையை உரிமையோடு பிடித்துக் கொண்டு வாக்குக் கேட்டார்.
வீடுகளுக்குள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களைத் தூக்கிக் கொஞ்சினார். வாகனங்களில் ஒலிபெருக்கியை அலறவிட்டு அலப்பறையைக் கொடுக்கும் பிரச்சாரங்களைவிட, அபிராமியின் இந்த சைலன்ட் பிரச்சாரத்துக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு.
இதேபோல் கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரத்தின் மகள் மருத்துவர் பூர்ணிமா, திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட வாரிசுகளும் தந்தையருக்காக கைகூப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago