ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டுப் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் தொடங்கி வைத்தார். முழுமையான வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பெண்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி மற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
» ஹாட் லீக்ஸ்: திருமங்கலம்... நிதிக்கு திண்டாடும் மணி!
» எலெக்ஷன் கார்னர்: முந்திக்கொள்ளுமோ மூர்த்தியின் கீர்த்தி?
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முகக்கவசங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago