மக்களவைத் தேர்தலில் பாஜக - முஸ்லிம் லீக் நேரடிப் போட்டியால், ராமநாதபுரம் தொகுதி ஒருவிதமான பதற்றத்தில் இருந்தது. இப்போதும் ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டது அதிமுக.
இங்கே தாமரை சின்னத்தில் போட்டியிடும் குப்புராமு, மதரீதியிலான பிரச்சாரத்தைக் கையில் எடுத்திருப்பதால், முஸ்லிம்கள் தரப்பில் இயல்பாகவே திமுக வேட்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக திரண்டு நிற்கிறார்கள். முத்துராமலிங்கத்தின் தேர்தல் செலவுக்கு தாராள நிதியுதவி, வாகன உதவி, உணவு ஏற்பாடு உள்ளிட்டவைகளை முஸ்லிம் அமைப்புகள் கவனித்துக் கொள்கின்றனவாம்.
“ஜமாத்தில் எல்லாம் சொல்லிட்டோம் மாமா... ஓட்டு உங்களுக்குத்தான்” என்று முத்துராமலிங்கத்தை உற்சாகப்படுத்துகிறார்களாம் பாய்கள். இந்த நிலையில், தாமரைக்கு ஓட்டுக் கேட்கும் தர்மசங்கடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் எம்பி-யான அன்வர் ராஜாவின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. சொந்த ஊரான பனைக்குளத்தில்கூட ஜமாத்திடம் அவரால் தைரியமாக ஓட்டுக் கேட்க முடியவில்லையாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago